நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ! (03.04.2026)

லீடர், காளிதாஸ் 2, கார்மேனி செல்வம், மரகதமலை, நீளிரா, பைக்கர் முதலிய படங்கள் நாளை தியேட்டரில் வெளியாகவுள்ளன.
நாளை திரையரங்குகளில் வெளியாகும்  6 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ! (03.04.2026)
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் 3ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

1. லீடர்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள படம் ‘லீடர்’. மகளை காக்க ஒரு தந்தை எடுக்கும் அதிரடி முடிவே கதை.

பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் , ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், வி.டி.வி. கணேஷ் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது

2. காளிதாஸ் 2

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் `காளிதாஸ் 2'. நகரத்தில் நடக்கும் பல கொலைகளை செய்பவன் யார் என்ற விசாரணையே கதை.

கடந்த 2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தற்போது, ‘காளிதாஸ்’ 2-ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா இப்படத்தில் நடித்துள்ளார். தணிக்கை வாரியம் ‘காளிதாஸ் 2’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

3. கார்மேனி செல்வம்

ராம் சக்ரீ இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன் நடித்துள்ள படம் ‘கார்மேனி செல்வம்’. பணத்தேவைக்காக ஒரு மனிதன் எடுக்கும் முயற்சிகளே கதை.

இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி , கவுதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திர மௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். ராகவ் ரமேஷ் இசையமைத்துள்ளார்.

4. மரகதமலை

சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் ‘மரகதமலை’. மரகத மலையை சுற்றி நடக்கும் மர்மங்களே கதை.

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரகதமலை’. சந்தோஷ் பிரதாப், தீப்ஷிகா, தம்பி ராமையா, ஜெகன், எம். எஸ். சஷாந்த் - எம். அரிமா வர்மன்- எம். கலைக்கோ வர்மன் - எம். எஸ். மஹித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எல். வி. முத்து கணேஷ் இசையமைத்திருக்கிறார் . குழந்தைகளுக்கான பேண்டஸி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எல் ஜி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லதா தயாரித்திருக்கிறார்.

5. நீளிரா

சோமிதரண் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் ‘நீளிரா’. இலங்கையில் போர் பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே ஒரு திருமணம் நடைபெறுகிறது. அதில் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதே படத்தின் உணர்ச்சிப்பூர்வமான பின்னணி.

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா, விது ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

6. பைக்கர்

அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் சர்வானந்த் நடித்துள்ள ‘பைக்கர்’ படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது. இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் திரைப்படமாக ‘பைக்கர்’ உருவாகி இருக்கிறது

சர்வானந்த் மற்றும் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பைக்கர்’. யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் ராஜசேகர், பிரமாஜி மற்றும் நடிகை மாளவிகா நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரன் படத்தில் நடித்த பிரபல நடிகர் அத்துல் குல்கர்னி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.

இதில் ‘விக்கி’ என்ற கதாபாத்திரத்தில் ஒரு வெறித்தனமான மற்றும் பைக் ரேஸராக சர்வானந்த் மிரட்டியுள்ளார். செண்டிமெண்டாக தந்தை – மகன் உறவும் இடம்பெற்றுள்ளது. இதில் சர்வானந்துக்குத் தந்தையாகவும், மிகவும் கண்டிப்பான பயிற்சியாளராகவும் ராஜசேகர் நடித்துள்ளார். தணிக்கை வாரியம் ‘பைக்கர்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com