ரூ.3.5 லட்சம் விலை; 4 அடி உயர கேக்குடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை

பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிறந்த நாளுக்காக ரூ.3.5 லட்சத்திற்கு கேக் வெட்டியது பரபரப்பாக பேசப்படுகிறது.
ரூ.3.5 லட்சம் விலை; 4 அடி உயர கேக்குடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை
Published on

பிரியங்கா பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார். ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரிஸ்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் ஹாலிவுட் பிரபலம் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

நடிகை  பிரியங்கா சோப்ரா நடித்த த ஸ்கை இஸ் பிங்க்என்ற படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. 

பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தன்னுடைய 37வது பிறந்தநாளை கணவருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதற்காக 4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட கேக்கை வாங்கியிருந்தார் அவரது கணவர் நிக் ஜோனஸ். Divine Delicacies Cakes என்ற நிறுவனம் செய்த இந்த சாக்லேட் vanilla concoction கேக்கின் விலை சுமார் 5000 டாலர்கள். இந்திய மதிப்பீட்டின் படி சுமார் மூன்றரை லட்சம் ரூபாய். இந்த செய்தியை கேள்விப்பட்ட திரையுலகமும், ரசிகர்களும் இத்தனை லட்சத்தில் கேக்கா? என தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்று சொல்லலாம். 

View this post on Instagram

My

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com