மலாய்கா உடனான திருமணம் எப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன் கபூர்

மலாய்கா உடனான திருமணம் எப்போது என ரசிகர்களின் கேள்விக்கு அர்ஜுன் கபூர் பதில் அளித்துள்ளார்.
மலாய்கா உடனான திருமணம் எப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன் கபூர்
Published on

மும்பை,

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலித்து வருகிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் லைவ் சேட்டில் பேசிய அர்ஜுன் கபூரிடம் ரசிகர்கள் கடந்த காலங்கள் திரைப்படங்கள் மற்றும் அவரது வாழ்க்கை பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்து பேசினார். அதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் மலாய்கா உடனான திருமணம் குறித்து கேட்டார்.

அதற்கு பதிலளித்த அர்ஜூன் , இப்போது நாங்கள் திருமணம் செய்ய விரும்பினால் எப்படி முடியும்?. திருமணம் முடிவானதும் நிச்சயம் ரசிகர்களுக்கு தெரிவிப்பேன் என கூறினார்.

ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரெயிலில் நடனம் ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com