ஒரே படத்தில்...தமிழில் ஹீரோ, தெலுங்கில் வில்லன்? - கலக்கும் சூரி


Hero in Tamil, villain in Telugu?
x

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் சூரி. பின்னர் 'விடுதலை பாகம் 1' 'கருடன், கொட்டுக்காளி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'மண்டாடி' என பெயரிடப்பட்டுள்ளது. மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்

சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் வைரலாகின. தெலுங்கிலும் இப்படம் இதே டைட்டிலில் வெளியாக உள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சுஹாஸ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் ஹீரோவாக நடிக்கும் சூரி தெலுங்கில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story