

சென்னை,
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்' ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'ஆண்பாவம் பொல்லாதது' என்ற படம் வெளியானது.
தற்போது, அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் 'ராம் இன் லீலா' என்ற நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ரியோ ராஜ் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தனது நிறுவனத்திற்கு ‘ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்’ என பெயரிட்டுள்ளதாக சமூக வலைதளப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். நடிகராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ரியோ ராஜ், தயாரிப்பாளராக எடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.