தாயாக வேண்டும் என்றால் திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை - நடிகை தபு

தாயாக வேண்டும் என்றால் திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை - நடிகை தபு
தாயாக வேண்டும் என்றால் திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை - நடிகை தபு
Published on

மும்பை

பாலிவுட் நடிகை தபு இவருக்கு 50 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தபு நடித்துள்ளார் .தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டே, சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தபு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எனக்கு எல்லோரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகலாம் . வாடகைத் தாய் (சரகோசி) மூலமாகவும் தாயாகும் வாய்ப்பு உள்ளது. எனக்கு தாயாக வேண்டும் என தோன்றினால் அந்த முறையை நான் கடைபிடிப்பேன்.என்னை யாராலும் தடுக்க முடியாது.

திருமணம் ஆகாவிட்டால் செத்துப் போக மாட்டோம். திருமணம் அவசியம் இல்லை. தற்போது எனது நடிப்பு தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். காதலுக்கும் திருமணத்துக்கும் வயதுக்கு சம்பந்தம் இல்லை.

திருமணத்திற்கும் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் வயது சம்பந்தமில்லை. இந்த காலத்தில் எதற்கும் வயது ஒரு தடையல்ல'' என்றார். தபுவின் கருத்து வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com