மாதவனை வியக்க வைத்த கதாநாயகிகள்

மாதவனை வியக்க வைத்த கதாநாயகிகள்
Published on

தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் மாதவன் இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். கங்கனா ரணாவத்துடன் இணைந்து இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தன்னை வியக்க வைத்த கதாநாயகிகள் பற்றி மாதவன் அளித்துள்ள பேட்டியில் "நான் நடித்த படங்களில் என்னோடு இணைந்து நடித்த கதாநாயகிகள் அனைவரும் தைரியசாலிகளாக இருந்தனர். ஏற்ற கதாபாத்திரங்களில் தைரியமாகவும் நடித்தார்கள்.

என்னுடன் நடித்த நடிகைகள் ஏதோ சில காட்சிகளில் நடித்து நடிப்பை விட்டு விலகி செல்பவர்களும் அல்ல. சினிமா துறையில் அவர்களுக்கு என்று பிரத்தியேகமான இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நிறைய தைரியம் வேண்டும், அது என்னுடன் நடித்த கதாநாயகிகளுக்கு இருந்தது.

இந்த விஷயத்தில் கங்கனாவை பாராட்டியே ஆக வேண்டும். அவர் மிகவும் புத்திசாலியான நடிகை. ரசிகர்கள் மனதில் எப்பொழுதும் நினைவில் நின்று விடும்படியான பல கதாபாத்திரங்களில் மிகத் திறமையாக நடித்திருக்கிறார். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் அல்லாமல் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து பாராட்டை பெற்றிருக்கிறார். ஒவ்வொரு முறை அவரது நடிப்பை பார்த்து நான் அதிசயித்துப் போகிறேன்'' என்றார். இதற்கு கங்கனா டுவிட்டர் மூலம் மாதவனுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com