விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்கும் ‘ஹாய் நானா’ பட இயக்குனர்

“ஹாய் நான்னா” பட இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்கும் ‘ஹாய் நானா’ பட இயக்குனர்
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவரகொண்டா, 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர். தனது தனித்துவமான நடிப்பு மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இதற்கிடையில், அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டு நானிi நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘ஹாய் நான்னா’ படத்தின் இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். இந்த தகவலை அவர் தனது எக்ஸ் தளத்தின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

வைரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹாய் நான்னா’ பட இசையமைப்பாளர் ஹேஷம் முகமது வஹாப் இசையமைக்கிறார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை மிர்னாள் தாகூர் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com