கமல்ஹாசன் பெயரை பயன்படுத்த தடை நீட்டிப்பு ஐகோர்ட்டு உத்தரவு

வர்த்தக ரீதியில் கமல் ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
கமல்ஹாசன் பெயரை பயன்படுத்த தடை நீட்டிப்பு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னையைச் சேர்ந்த 'நீயே விடை' என்ற தனியார் நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற பட்டத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகவும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட் டில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வர்த்தக ரீதியில் கமல் ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனம் தரப்பில் யாரும் ஆஜராகாததால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஏற்கனவே விதித்த தடையை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com