திருடர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர்
Published on

ஜெனரல் ஹாஸ்பிட்டல், ஹாலிவுட் கேர்ள், அனிமல் கிங்டம் உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜானி வேக்டர் (37). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜானி தாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது தாயார் ஊடகங்களிடம் கூறினார். திருடர்கள் அவரது காரில் இருந்து சில பொருட்களை திருட முயன்றனர்.

ஜானி அவர்களுடன் சண்டையிட முயற்சிக்கவில்லை. இருந்தாலும் திருடர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டதாக கண்ணீர் மல்க அவரது தாயார் சொல்லி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த உடனேயே ஜானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையில் ஜானியின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் யாரையும் காவல்துறை இன்னமும் கைது செய்யவில்லை. ஜானியின் முகவர் இவரின் மரணச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக திரைக்கலைஞர்கள் பலரும் இவரது மறைவுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com