'ஜான் விக்' பட புகழ் ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்

'ஜான் விக்' பட புகழ் ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்
Published on

ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக். இவர் கீனு ரீவ்ஸ் கதாநாயகனாக நடித்து உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் அதிரடி சண்டை படமான 'ஜான் விக்' படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்தின் முதல் பாகம் 2014-ல் வெளியானது. இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டிலும் மூன்றாம் பாகம் 2019-லும் வந்தது. தற்போது ஜான் விக் படத்தின் 4-ம் பாகம் தயாராகி வருகிற 24-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

ஜான் விக் படம் மட்டுமின்றி ரெசிடென்ட் ஈவில், ஒயிட் ஹவுஸ் டவ்ன். காட்ஸிலா வெர்சஸ் காங்க், ஒயர், லாஸ்ட், போச் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் லான்ஸ் ரெட்டிக் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

லான்ஸ் ரெட்டிக் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com