ஹாலிவுட் ஹாரர்.. 'ஈவில் டெட் பர்ன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

இந்த படம் ஜூலை 10ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.
ஹாலிவுட் ஹாரர்.. 'ஈவில் டெட் பர்ன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

பிரபல ஹாரர் திரைப்பட தொடரான ‘ஈவில் டெட்’ வரிசையில் உருவாகி வரும் புதிய படம் ‘ஈவில் டெட் பர்ன்’-ன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரத்தக்கறை நிறைந்த காட்சிகள், திகில் தரும் பின்னணி இசை மற்றும் அதிரடியான திரைக்காட்சிகள் மூலம் இந்த டிரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது.

முன்னைய ‘ஈவில் டெட்’ படங்களைப் போலவே, இந்த படமும் அமானுஷ்ய சக்திகள் மற்றும் மனிதர்களுக்கிடையிலான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. செபாஸ்டியன் வானிசெக் இயக்கிய இந்த படத்தில் ஹண்டர் டூன், லூசியானே புக்கானன், சௌஹெயில யாகோப், தாண்டி வ்ரைட், ஜார்ஜ் புல்லர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

ஹாரர் கதையில், பயமுறுத்தும் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 10ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இதனை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com