திருமணமா வேண்டவே வேண்டாம்...! ஆனால் அது ஓகே...!- நடிகை ஹனி ரோஸ்

நடிகை ஹனி ரோஸ் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டியில் நடித்த அளவுக்கு அவருக்கு வேறு எந்தப் படத்திலும் புகழ் கிடைக்கவில்லை.
திருமணமா வேண்டவே வேண்டாம்...! ஆனால் அது ஓகே...!- நடிகை ஹனி ரோஸ்
Published on

திருவனந்தபுரம்

மலையாள நடிகை ஹனி ரோஸ். 2005 ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சவுண்ட் ஆப் பூட் (2008), சிங்கம் புலி (2011), உப்புகண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன் (2011), அஜந்தா (2012), ஹோட்டல் கலிபோர்னியா (2013), ரிங் மாஸ்டர் (2014), கும்பசாரம் (2015), சாலக்குடிக்காரன் சங்கதி (2018), இட்டிமணி: மேட் இன் சீனா (2019), பிக் பிரதர் (2020), வீரசிம்ம ரெட்டி தெலுங்கு (2023). ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'மல்லுக்கட்டு', 'கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

அவர் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டியில் நடித்த அளவுக்கு அவருக்கு வேறு எந்தப் படத்திலும் புகழ் கிடைக்கவில்லை.

தற்போது நடிகை தனது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஆம் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை, ஆனால் தனது வாழ்க்கையில் ஒரு துணையை விரும்புகிறார் என கூறி உள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

திருமணம் செய்துகொள்வது தனக்கு பிரச்சனையாக இருப்பதால், வேறு ஒருவரின் திருமணத்திற்கு செல்வது தனக்கு பிடிக்கவில்லை

கல்யாணத்துக்குப் போனால் எல்லோருடைய பார்வையும் என் மேல் விழும், அதற்காக யாருடைய திருமணத்திற்கும் செல்லமாட்டேன்.

வேடிக்கைக்காக யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. தங்களிடம் பணம் இருப்பதைக் காட்டத்தான் திருமணம் என்று சொல்கிறார்கள்.

என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து உள்ளன. எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு அந்த ஆசை இல்லை என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com