

இது ஒரு குற்றப்பின்னணி யிலான திகில் படம். முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஜி.அருள்குமார் கூறியதாவது:-
இது ஒரு கிரைம் த்ரில்லர். ஒரு குற்றம் பற்றி விசாரணை நடத்தும் கதை. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் பின்னணியில், ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார். தினேஷ் லட்சுமணன் கதை எழுதி டைரக்டு செய்து இருக்கிறார்''. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.