பட வாய்ப்புக்காக கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படம்

பட வாய்ப்புக்காக கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படம்
Published on

கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த புதிதில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார். அரைகுறை உடைகள் அணியவும் கவர்ச்சியாக நடிக்கவும் மறுத்தார்.

கவர்ச்சியாக நடிக்க வந்த பட வாய்ப்புகளையும் நிராகரித்தார். நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தபிறகு அவரது குடும்ப பாங்கான இமேஜ் மேலும் உயர்ந்தது. தொடர்ந்து அதுமாதிரியான வேடங்களே வந்தன.

கவர்ச்சிக்கு மறுத்ததால் இளம் முன்னணி கதாநாயகர்கள் அவரை ஜோடியாக்க தயங்கினர். இதனால் படங்கள் குறைந்தன. இதையடுத்து தனது முடிவை மாற்றி கவர்ச்சியில் இறங்க கீர்த்தி சுரேஷ் முடிவு செய்து இருக்கிறார்.

தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் அரைகுறை உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் மூலம் கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார் என்பதை அவர் சூசகமாக தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com