இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த `ஹாட் ஸ்பாட் 2 மச்' தயாரிப்பாளர்கள்

`ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனருக்கு சொகுசு காரை பரிசளித்தனர்.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த `ஹாட் ஸ்பாட் 2 மச்' தயாரிப்பாளர்கள்
Published on

சென்னை,

‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’. இதில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படம், 2024ஆம் ஆண்டு வெளியான முதல் பாகமான ‘ஹாட் ஸ்பாட்’ படத்தைப் போலவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

திரையரங்குகளில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படம் நாளை முதல் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், படம் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருவதால், மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் அனில் ரெட்டி மற்றும் ராபின் ஆகியோர், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு சொகுசு கார் (மகேந்திரா எக்ஸ்யூவி) ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்வு படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com