'ஹவுஸ்புல் 5': சக நட்சத்திரங்களுடன் அக்சய் குமார் - வைரலாகும் புகைப்படம்

நடிகர் அக்சய் குமார், 'ஹவுஸ்புல் 5' படத்தின் சக நட்சத்திரங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
'Housebull 5': Akshay Kumar with co-stars - photo going viral
Published on

மும்பை,

அக்சய் குமார் , ஜியா கான், அர்ஜுன் ராம்பால், ஜாக்குலின் பெர்னாண்டஸ், லாரா தத்தா மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ல் 'ஹவுஸ்புல்' தொடரின் முதல்பாகம் வெளியானது.

இந்த தொடரில் இதுவரை 4 பாகங்கள் வெளியாகி உள்ளன. இந்த 4 பாகங்களிலும் அக்சய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளனர். ஒவ்வொன்றும் முந்தைய பாகத்தின் கதையுடன் தொடர்பில்லாத ஒரு புதிய கதையாகவே இருக்கும்.

தற்போது 'ஹவுஸ்புல்' தொடரின் 5-ம் பாகம் உருவாகி வருகிறது. 5-வது பாகத்தை எட்டிய முதல் இந்திபடம் என்ற பெருமை 'ஹவுஸ்புல்' படத்தையே சேரும். இதில், அக்சய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத், பர்தீன் கான், நானா படேகர், சங்கி பாண்டே, ஜாக்கி ஷெராப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் டினோ மோரியா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அக்சய் குமார், 'ஹவுஸ்புல் 5' படத்தின் சக நட்சத்திரங்களான டினோ மோரியா, ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் 6-ந் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com