`சூர்யா சார் படத்தை எப்படி நிராகரிப்பேன்' - நடிகை நஸ்ரியா

சூர்யா - நஸ்ரியா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘சீன்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

`சூர்யா சார் படத்தை எப்படி நிராகரிப்பேன்' - நடிகை நஸ்ரியா
Published on: 

சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பம் தற்போது ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ள நிலையில், நஸ்ரியாவின் இந்த விளக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் 'சீன்'

ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' திரைப்படம் திரில்லர் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இதில் சூர்யா வித்தியாசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லென் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தமிழ் திரையில் தோன்றுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

3 முறை நிராகரித்த நஸ்ரியா

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சூர்யா, நஸ்ரியாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை குறித்து பேசினார். அப்போது, "நான் எப்போதும் நஸ்ரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். இதற்கு முன்பு எனது 3 படங்களில் நடிக்க அவரிடம் கேட்டோம். ஆனால், மூன்று முறையும் அவர் மறுத்துவிட்டார். நான்காவது முறையாக கேட்டபோதுதான் சம்மதம் தெரிவித்தார்" என்று சூர்யா தெரிவித்திருந்தார்.

“சூர்யா சார் படத்தை எப்படி நிராகரிப்பேன்?”

இதற்கு பதிலளிக்கும் வகையில், கேரளாவில் நடைபெற்ற ‘சீன்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நஸ்ரியா, “நான் 3 படங்களில் நடிக்க நிராகரித்ததாக சூர்யா சார் கூறினார். அது ஒரு ஜோக். உண்மையில் படங்களின் தேதிகள் மற்றும் வேறு சில குழப்பங்களால்தான் அவருடன் நடிக்க முடியாமல் போனது. நான் சூர்யா சார் படத்தை எப்படி நிராகரிப்பேன்?” என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பம் தற்போது ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ள நிலையில், நஸ்ரியாவின் இந்த விளக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சூர்யா - நஸ்ரியா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘சீன்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

X