ஜெயம் ரவி 'பொன்னியின் செல்வனாக' மாறியது எப்படி? - படக்குழு வெளியிட்ட வீடியோ

ஜெயம் ரவி நடித்துள்ள 'அருண்மொழி வர்மன்' கதாப்பாத்திரத்தின் தோற்றம் வடிவமைக்கப்பட்டது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயம் ரவி 'பொன்னியின் செல்வனாக' மாறியது எப்படி? - படக்குழு வெளியிட்ட வீடியோ
Published on

சென்னை,

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள 'அருண்மொழி வர்மன்' (பொன்னியின் செல்வன்) கதாப்பாத்திரத்தின் தோற்றம் வடிவமைக்கப்பட்டது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com