'கூலி' படத்தில் நடனமாட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு?

'கூலி' படத்தில் இடம் பெற்றுள்ள குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
சமீபத்தில் படக்குழு இதனை அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த குத்து பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே ரூ. 2 கோடி சம்பளம் கேட்டதாக தெரிகிறது.
Related Tags :
Next Story






