"கேங்கர்ஸ்" படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?


How much did the first day collection of the movie Gangers cost?
x
தினத்தந்தி 26 April 2025 6:51 AM IST (Updated: 27 April 2025 11:59 AM IST)
t-max-icont-min-icon

சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் 'கேங்கர்ஸ்'

சென்னை,

சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுமார் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தநிலையில், நேற்று முன்தினம் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

கேத்ரின் தெரசா, வாணி போஜன், ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம் தமிழ்நாட்டில் 316 தியேட்டர்குகளில் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் 'கேங்கர்ஸ்' திரைப்படம் முதல் நாளில் 1 கோடியே 16 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story