மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?


மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?
x

மோகன்லாலின் ஊட்டி பங்களா ஒரு நாள் வாடகை ரூ.37,000 என்றும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதால் மக்கள் பலரும், அங்கு தங்கிச் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.பொதுவாக திரைப்பிரபலங்கள் என்றால், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வார்கள். ஏராளமான சொத்துகள், வீடுகள் இருக்கும். இதுபோலவே, ஏற்கனவே நடிகர் மம்முட்டி, கேரளத்தில் உள்ள தனது வீட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வாய்ப்பை வழங்கினார்.

ஆனால், இங்கு ஒரு குடும்பம் தங்குவதற்கு ரூ.75,000 வாடகையாக வசூலிக்கப்பட்டது. இது ஒரு நாள் வாடகை.அந்த வகையில், தற்போது மோகன்லாலின் ஊட்டி பங்களாவும் வாடகைக்குக் கிடைக்கிறது. முன்பு, இதனை மோகன்லால் தனக்கும், குடும்பம் மற்றும் நண்பர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார்..தற்போது, தனியார் சுற்றுலா அமைப்பு மூலம் இந்த வீடு சுற்றுலாப் பயணிகள் ஒரு சில நாள்கள் தங்கிச் செல்ல வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஊட்டியிலிருந்து வெறும் 15 நிமிடத்தில் இங்குச் செல்லலாம் என்றும், ஒரு நாள் வாடகை ரூ.37,000 என்றும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது

1 More update

Next Story