ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘டெக்ஸாஸ் டைகர்’ படம் இசை தொடர்பான இளமை ததும்பும் வண்ணமயமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

பேமிலி படம் படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன், அடுத்து இயக்கும் படம், டெக்ஸாஸ் டைகர். இதில், ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார், செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதில், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, வாபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், அந்தோணி தாசன், சம்யுக்தா ஷான் நடித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இது இசை தொடர்பான இளமை ததும்பும் வண்ணமயமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com