''ஜாக்கி 42'' படத்தில் இரட்டை வேடத்தில் ஹிருத்திகா?


Hrithika Srinivas saddles up for a dual-shaded role in Kiranrajs Jockey 42
x
தினத்தந்தி 22 July 2025 8:30 PM IST (Updated: 22 July 2025 9:23 PM IST)
t-max-icont-min-icon

குதிரைப் பந்தயத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஜாக்கி 42 படத்தை குருதேஜ் ஷெட்டி இயக்குகிறார்.

சென்னை,

குருதேஜ் ஷெட்டி இயக்கும் கிரண் ராஜின் அதிரடி படமான ''ஜாக்கி 42'' -ல் ஹிருத்திகா ஸ்ரீனிவாஸ் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

''உடலா'' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்ட ஹிருத்திகா தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை முடித்து விரைவில் ஜாக்கி 42 படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஹிருத்திகா 2 வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தப் படத்தில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்பட துறைகளைச் சேர்ந்த நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குதிரைப் பந்தயத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஜாக்கி 42 படத்தை பாரதி சத்யநாராயண், கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கிறார். வினோத் யஜமான்யா இசையமைக்கிறார்.

1 More update

Next Story