ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லர் ‘மூன்றாம் கண்’.. விரைவில் வெளியீடு

இந்த படத்தில் விதார்த், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லர் ‘மூன்றாம் கண்’.. விரைவில் வெளியீடு
Published on

அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மூன்றாம் கண்'. இந்த படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லராக உருவாகி உள்ள 'மூன்றாம் கண்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், 'மூன்றாம் கண்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்குள் இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com