''ஓஜி'' படத்தில் மேக்கப் போடாமல் நடித்த நடிகை

சுஜீத் இயக்கி உள்ள இந்த கேங்ஸ்டர் ஆக்சன் படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார்.
சென்னை,
பவன் கல்யாணின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''ஓஜி'' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுஜீத் இயக்கி உள்ள இந்த கேங்ஸ்டர் ஆக்சன் படத்தில் பாலிவுட் நடிகர் எம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடித்திருக்கிறார்.
மேலும், ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை ஸ்ரேயா ரெட்டி பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், '' நான் என் கதாபாத்திரத்தில் மேக்கப் போடாமல் நடித்தேன். கதாபாத்திரம் உண்மையானதாகவும் இயற்கையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது கதாபாத்திரம் நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுள்ளது'' என்றார்.
Related Tags :
Next Story






