"சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா".. கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ வைரல்

சினிமா துறையில் நடிகர் சிவராஜ் குமார் 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சென்னை,
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார். இவர் தமிழில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது ரஜினியில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், சினிமா துறையில் நடிகர் சிவராஜ் குமார் 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசனும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி. ராஜ்குமார் எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு. சிவராஜ்குமாரல பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. இன்று மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிறார். இனியும் சாதிக்கவிருக்கிறார். இவையெல்லாம் எனக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.