

சென்னை,
சிம்புவுடன் முதல் முறையாக நடிப்பதாக கூறி அரசன்’படத்தில் இருப்பதை நடிகை பிரியங்கா மோகன் உறுதி செய்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா மோகன், ‘அரசன்’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
அவர் பேசுகையில், “எனக்கு வெற்றிமாறன் சார் ரொம்ப பிடிக்கும். ‘அரசன்’ படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். சிம்பு சாருடன் முதல் முறையாக நடிக்கிறேன். வித்தியாசமான சிம்பு சாரை இந்த ‘அரசன்’ படத்தில் பார்ப்பீர்கள்.
இந்த படத்தில் முதல் முறையாக வடசென்னை மொழியிலும் பேசியுள்ளேன். ‘அரசன்’ ஒரு மேஜிக்கலான அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்தார்.
பிரியங்கா மோகனின் இந்தப் பேச்சு, ‘அரசன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.