``அதில் ரொம்ப கவனமாக இருக்கிறேன்...’’- சிவகார்த்திகேயன்


I am being very careful... - Sivakarthikeyan
x

சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

அடுத்ததாக தான் நடிக்கவுள்ள படம் பற்றி சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,

"சமீப காலமாக நான் ரொம்ப சீரியஸான படங்களில் நடித்து விட்டேன். இதனால் அடுத்ததாக நான் நடிக்கவுள்ள படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன்’’ என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த திரைப்படம் ‘பராசக்தி’ . சுதா கொங்கரா இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த 10ம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story