ரூ.6 கோடிக்கு மீனா வீட்டை வாங்கினேனா? நடிகர் சூரி விளக்கம்

வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா காமெடியில் நடித்து பிரபலமானவர் சூரி. தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.
ரூ.6 கோடிக்கு மீனா வீட்டை வாங்கினேனா? நடிகர் சூரி விளக்கம்
Published on

சந்தானம் கதாநாயகனாகி விட்டதால் சூரிக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிப்பதுடன் ஓட்டல் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். மதுரையில் ஏற்கனவே உயர்தர சைவ உணவகம் நடத்தி வருகிறார். இதற்கு கிடைத்த வரவேற்பினால் சமீபத்தில் மேலும் 2 உணவகங்களை திறந்து இருக்கிறார். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் இந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர்.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் நடிகை மீனாவின் வீடு விலைக்கு வந்ததாகவும் அதை ரூ.6.5 கோடி கொடுத்து சூரி வாங்கி விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை சூரி மறுத்துள்ளார். மீனா விட்டை வாங்கியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான். சென்னையில் சமீபத்தில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com