சூதாட்ட கதைக்களத்தில் உருவான ‘ஐ அம் கேம்’… எப்போது ரிலீஸ்?

சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் ‘ஐ அம் கேம்’ படம் உருவாகி உள்ளது.

சூதாட்ட கதைக்களத்தில் உருவான ‘ஐ அம் கேம்’… எப்போது ரிலீஸ்?
Published on

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காந்தா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது துல்கர் சல்மான், ‘ஐ அம் கேம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவரது திரைப்பயணத்தில் 40வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.

சூதாட்டத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில், தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு அமைத்துள்ளனர்.

சுமார் 11 மாதங்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. முதலில் கோடை வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துல்கர் சல்மான் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com