"இந்த செய்தியை பார்த்து மனமுடைந்தேன்" - ராஷ்மிகா மந்தனா உருக்கம்

தெலுங்கானா அரசை விமர்சனம் செய்யும் வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சிக்கந்தர்' நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக 'குபேரா' படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், தெலுங்கானா அரசை விமர்சனம் செய்யும் வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தெலுங்கானாவில் 400 ஏக்கர் காட்டின் நிலத்தை அழித்து தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதனை கண்டித்து மாணவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசின் இந்த முடிவை கண்டிக்கும் விதமாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில் இந்த செய்தியை பார்த்து மனமுடைந்து போனதாகவும், இந்த முடிவு மிகவும் தவறு என்றும் கூறியிருக்கிறார்.






