பணக்கஷ்டத்தில் இருக்கிறேன் -நடிகர் மனோஜ் பாஜ்பாய்

மனோஜ் பாஜ்பாய்க்கு ரூ.170 கோடி சொத்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது
Image Credits: Instagram.com\Bajpayee.manoj
Image Credits: Instagram.com\Bajpayee.manoj
Published on

'பேமிலிமேன்' வெப் தொடர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் மனோஜ் பாஜ்பாய். இவருடன் பேமிலிமேன் 2-ம் பாகத்தில் சமந்தாவும் நடித்து இருந்தார். தமிழில் விஷாலுடன் 'சமர்', சூர்யாவின் 'அஞ்சான்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மனோஜ் பாஜ்பாய்க்கு ரூ.170 கோடி சொத்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதற்கு மனோஜ் பாஜ்பாய் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, "எனது வங்கி கணக்கில் குறிப்பிட்ட அளவு பணத்தை சேர்க்க போராடுகிறேன். இன்னும் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். நான் நடிக்கும் படங்கள் மூலம் அதிக பணம் சேர்ப்பது என்பது முடியாத காரியம்.

எனக்கு ரூ.170 கோடி சொத்து இருப்பதாக பரவி உள்ள தகவலை பார்த்தாவது எனது தயாரிப்பாளர்கள் சம்பளத்தை உயர்த்துவார்கள் என்று நம்புகிறேன். நான் பணத்துக்காக நடிக்கவில்லை. கதாபாத்திரங்கள் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவேண்டும் என்பதே முக்கியம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com