"ஐஸ்வர்யாராயை பார்த்து பொறாமைப்படுகிறேன்" - நடிகை மீனா

“ஐஸ்வர்யாராயை பார்த்து பொறாமைப்படுகிறேன்” என நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
"ஐஸ்வர்யாராயை பார்த்து பொறாமைப்படுகிறேன்" - நடிகை மீனா
Published on

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பின்னர் முன்னணி கதாநாயகியாகி புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்தார். ரஜினிகாந்துடன் நடித்த எஜமான், வீரா, முத்து ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. திருமணத்துக்கு பிறகு மீனா நடிப்பதை குறைத்து, குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கணவரை இழந்த மீனாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வந்தனர். தற்போது சகஜ நிலைக்கு திரும்பி உள்ள மீனா தோழியுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யாராய் குறித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ''பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது. இதனால் ஐஸ்வர்யாராய் மீது மிகவும் பொறாமையாக உள்ளது, இப்படி நான் பொறாமைப்படுவது இதுதான் முதல் முறை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்-நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்து உள்ளார். இந்த பதிவு வலைத்தளத்தில் வைரலாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com