“நான் லக்கிதான்” - நடிகை ஆஷிகா ரங்கநாத் ஓபன் டாக்

தனது கெரியரின் ஆரம்பத்தில் பெரிய நட்சத்திரங்களுடன் நடிப்பதை அதிர்ஷ்டமாக உணர்வதாக ஆஷிகா கூறினார்.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தை உருவாக்கி வரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், தொடர்ச்சியாக தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது அவர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ (பிஎம்டபிள்யூ) படத்தில் நடித்துள்ளார். கிஷோர் திருமலா இயக்கும் இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பெரிய நட்சத்திரங்களுடன் நடிப்பதை அதிர்ஷ்டமாக உணர்வதாக ஆஷிகா கூறினார். அவர் பேசுகையில்,
"நான் தற்போது ’விஸ்வம்பரா’ மற்றும் ’சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறேன். மேலும் ’அடி நா பில்லாரா’ என்ற படத்திலும் நடிக்கிறேன். இந்த ஆரம்ப கட்டத்திலேயே இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்," என்றார்.
Related Tags :
Next Story






