''லியோ2' என்கிறார்கள், ஆனால் விஜய்யுடன் நான் பண்ண விரும்பும் படம் அதுதான்' - லோகேஷ் கனகராஜ்

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் லியோ 2 பற்றி பேசினார்.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் லியோ. ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது.
இதனையடுத்து இதன் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், விஜய் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் இப்படம் வருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் லியோ 2 பற்றி பேசினார். அவர் கூறுகையில்,
'எல்லோரும் நான் 'லியோ2' பண்ண வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் நான் விஜய்யுடன் 'மாஸ்டர் 2' பண்ண விரும்புகிறேன். விஜய்யை ஜேடியாக பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மாஸ்டர் படத்தில் சொல்ல வேண்டிய பகுதி இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கான சரியான யோசனை என்னிடம் உள்ளது. அது விஜய்க்கும் தெரியும்' என்றார்.






