"எனக்கு பிகினி உடைகளில் நடிப்பதில் உடன்பாடு இல்லை"- நடிகை காஜல் அகர்வால்

அந்த மாதிரியான தோற்றத்தில் திரையில் தோன்றுவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை, என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

"எனக்கு பிகினி உடைகளில் நடிப்பதில் உடன்பாடு இல்லை"- நடிகை காஜல் அகர்வால்
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழித் திரையுலகிலும் முன்னணி நடிகையாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் காஜல் அகர்வால். 'பழனி', 'நான் மகான் அல்ல', 'மாற்றான்', 'துப்பாக்கி', 'ஜில்லா', 'விவேகம்', 'கோமாளி', 'இந்தியன் 2' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

'தி இந்தியா ஸ்டோரி' படத்தில் காஜல்

தற்போது சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுடன் இணைந்து நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வெளியிடும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

"பிகினி உடையில் நடிக்க விருப்பமில்லை"

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரையில் பிகினி உடையில் நடிப்பது குறித்து காஜல் அகர்வால் மனம் திறந்து பேசினார். "எனக்கு பிகினி உடைகளில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்று நான் நம்புகிறேன். அந்த மாதிரியான தோற்றத்தில் திரையில் தோன்றுவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை," என்று அவர் தெரிவித்தார்.

நெருக்கமான காட்சிகளுக்கும் 'நோ'

மேலும், "படங்களில் அளவுக்கு அதிகமான நெருக்கமான காட்சிகளில் நடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதுதான் நான் எனக்கான எல்லையை வகுத்துக் கொண்ட இடம். அந்த எல்லையை மீறும் காட்சிகள் இருந்தால், அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று நேரடியாக சொல்லிவிடுவேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய காஜல், "அது எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும், எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஒரு நடிகராக நமக்கென்று ஒரு எல்லையை நாம்தான் நிர்ணயிக்க வேண்டும். அந்தக் கொள்கையில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்," என்று தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com