'நான் பொது சொத்து அல்ல' - காட்டமாக பேசிய நடிகை டாப்சி

நடிகர், நடிகைகளோடு செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடிப்பது வழக்கம்
'I am not public property' - Taapsee
Published on

சென்னை,

நடிகர், நடிகைகளோடு செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடிப்பது வழக்கம். சிலர் சிரித்தபடி போஸ் கொடுப்பார்கள். சிலர் அதை விரும்பாமல் வேகமாக சென்று விடுவார்கள். இன்னும் சிலர் கோபத்தை வெளிப்படுத்துவதும் உண்டு.

அந்த வகையில், பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை துரத்திச் சென்று போட்டோ, வீடியோ எடுப்பவர்கள் 'பாப்பரசி' எனக் கூறப்படுகிறார்கள். இந்நிலையில், 'பாப்பரசி'கள் குறித்து நடிகை டாப்சி காட்டமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'நான் பிரபலமான ஒரு நபர், பொது சொத்து கிடையாது. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. திரைக்கு பின் இருக்கும் பெண்கள் 'இல்லை என்றால் இல்லை' ஆனால், அதுவே நாங்கள் கூறினால் ஏற்க மாட்டார்கள்.

நான் முதலில் பெண். அதன்பிறகுதான் நடிகை. நான் இப்படி சொல்வதால், இது எனக்கு ஏற்ற தொழில் இல்லை என சிலர் நினைக்கலாம். ஆனால், நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில்,' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com