அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்: நடிகர் சூர்யா

நான் அரசியலுக்கு போக மாட்டேன் என சொல்வதால் அரசியலை வெறுப்பதாக அர்த்தம் இல்லை. மவுனமாக, உன்னிப்பாக அரசியலைக் கவனிக்கிறேன் என்று சூர்யா கூறியுள்ளார்.
 சூர்யா
Published on: 

நடிகர் சூர்யா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விடமாட்டேன். என் மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். நான் அரசியலுக்கு போக மாட்டேன் என சொல்வதால் அரசியலை வெறுப்பதாக அர்த்தம் இல்லை. மவுனமாக, உன்னிப்பாக அரசியலைக் கவனிக்கிறேன்.

மனதிற்குப் பிடித்து முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு அரசியலில் ஈடுபட முடியும் என்றால் யார் வேண்டுமென்றாலும் இதில் ஈடுபடலாம். அரசியலை முழுமையாக தெரிந்துகொண்டு, அதன் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொண்டு இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கல்விதான் எல்லாவற்றையும் மாற்றும். வெறுமனே மாற்றம், மாற்றம் என்று சொல்வது பிரயோஜனம் இல்லை. மாற்றத்தை விரும்புபவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

X