சினிமாவுக்காக எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறேன்- நடிகை சாக்ஷி அகர்வால்

சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தீயோர் கூடம்' என்ற படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார்.
சினிமாவுக்காக எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறேன்- நடிகை சாக்ஷி அகர்வால்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நவ்னீத் கிஷோரை திருமணம் செய்துகொண்ட சாக்ஷி அகர்வால், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் சக்திவேல் இயக்கத்தில் 'தீயோர் கூடம்' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் டேனியல் ஆனி போப், வையாபுரி, ஜாவா சுந்தரேசன், வசந்தி, ஜேஸ்பர், சத்யா, சம்யுதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கிரைம் - திரில்லர் ரகத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை முன்னணி இசையமைப்பாளரான தேவா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறும்போது, என் திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். என்னை வாழவைக்கும் சினிமாவுக்காக எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறேன். திருமணம் நடிகைகளுக்கு தடை கிடையாது. கடின உழைப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்ப்பேன், என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com