ரசிகர்களை நம்பி களமிறங்கி இருக்கிறேன் - நடிகர் தர்ஷன்


ரசிகர்களை நம்பி களமிறங்கி இருக்கிறேன் - நடிகர் தர்ஷன்
x

ரசிகர்களின் ஆதரவை வேண்டி காத்திருக்கிறேன் என்று நடிகர் தர்ஷன் கூறியுள்ளார்.

ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹவுஸ் மேட்ஸ். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பட விழாவில் தர்ஷன் பேசும்போது, "இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. என்னை நம்பி இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை தந்த படக்குழுவுக்கு நன்றிகள்.

டிரெய்லரை பார்த்துவிட்டு 'இது திகில் படமா?' என்கிறார்கள். அதையும் தாண்டி யூகிக்க முடியாத திரைக்கதையும், ஆச்சரியங்களும் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு படம் இது. ரசிகர்களை நம்பி களமிறங்கி இருக்கிறேன். அவர்களின் ஆதரவை வேண்டி காத்திருக்கிறேன்" என்றார்.

கதாநாயகி ஆர்ஷா பைஜூ பேசுகையில், "நான் நடித்ததிலேயே பிடித்த நடிகர் தர்ஷன். படத்தில் எனக்கான சந்தேகங்கள், தமிழ் பேசுவதில் ஏற்பட்ட தடங்கல்கள் போன்றவற்றில் அவர் செய்த உதவிகளை மறக்க முடியாது" என்றார்.

"படத்தில் நிறைய சர்ப்ரைஸ் மூட்டைகள் இருக்கிறது. ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது'' என்று காளிவெங்கட் குறிப்பிட்டார்.

1 More update

Next Story