நான் “மேக்கப்” விரும்பாதவள் - நடிகை சாரா அர்ஜுன்

தான் மேக்கப் விரும்புவது இல்லை என்றும் இயற்கையான அழகைதான் விரும்புவதாகவும் நடிகை சாரா அர்ஜுன் கூறியுள்ளார்.
நான் “மேக்கப்” விரும்பாதவள் - நடிகை சாரா அர்ஜுன்
Published on

விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத்திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. குறிப்பாக கோர்ட்டு காட்சியில் அவரது நடிப்பு கண்களை குளமாக்கியது. அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் 'சைவம்' படத்தில் சாரா நடித்தார். மும்பையைச் சேர்ந்த சாரா அர்ஜுன் அதனைத்தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

20 வயதாகும் சாரா அர்ஜுன் தற்போது கதாநாயகி ஆகி விட்டார். சமீபத்தில் இந்தியில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் கதாநாயகியாக ஜொலித்து அசத்தினார். தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் சாரா அர்ஜுன் விரைவில் தென்னிந்திய சினிமாவிலும் கதாநாயகியாக காலடி எடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சாரா அர்ஜூனிடம் உங்கள் அழகை பாதுகாக்க என்னென்ன அழகுப் பொருட்கள் பயன்படுத்துகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு சாரா அர்ஜுன் பதிலளிக்கை யில், “நான் பெரிய அளவில் மேக்கப் விரும்புவது கிடையாது. இயற்கையான அழகை தான் விரும்புகிறேன. எனவே பட விழாக்களுக்கு சென்றாலும் லேசான 'டச்சப்' மட்டும் செய்து கொண்டு கிளம்பி விடுவேன். படப்பிடிப்பின் போதும் தேவைப்படும் பட்சத்தில் தான் உரிய 'மேக்கப்' சாதனங்களை. அதுவும் அளவாக தான் பயன்படுத்துவேன். மற்றபடி 'மேக்கப்' விரும்பாத ஆள் நான்”, என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com