“நான் பெரிய அதிர்ஷ்டசாலி” -நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துள்ள அவருக்கு இப்போது மீண்டும் இந்தியில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் பெரிய அதிர்ஷ்டசாலி” -நடிகை தமன்னா
Published on

என்னை போல் பெரிய அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. எல்லா மொழிகளிலும் நடித்து இந்தியாவிலேயே என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற அளவுக்கு பிரபலமாகி இருக்கிறேன். இந்த பெயரும் புகழும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கில் வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து இருக்கிறேன்.

அந்த படங்கள் மூலம் உலக அளவிலும் அடையாளம் காணப்பட்டேன். ஏற்கனவே இந்தி படங்களில் நடித்து இருக்கிறேன். இப்போது மீண்டும் இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. நவாஜூதின் சித்திக் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் நடிப்பதை சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.

ஏற்கனவே நடித்த படங்களில் இருந்து இந்த படத்தின் கதாபாத்திரம் வேறுபட்டு இருக்கும். ரசிகர்கள் என்னை புதிதாக நடிக்க வந்த கதாநாயகி மாதிரி பார்க்க வேண்டும். அப்போதுதான் நானும் ஏற்கனவே நடித்ததையெல்லாம் மறந்து புதிதாக அறிமுகமான மாதிரி நடிக்க முடியும். புதிதாகவும் காட்சி அளிக்க முடியும். இவ்வாறு தமன்னா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com