சினிமா உலகின் “ஜென்சி” தலைமுறையில் நான்தான் மிகவும் மூத்தவன் - கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் 67 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சினிமா உலகின் “ஜென்சி”  தலைமுறையில் நான்தான் மிகவும் மூத்தவன் -  கமல்ஹாசன்
Published on

67 ஆண்டு திரைப்பயணத்தில் வெறும் 20 ஆண்டுகளை மட்டுமே தன்னுடைய உண்மையான கற்றலாக கருத முடியும் என்று கமல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படமான ‘தர்மன்’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை ‘டிராகன்’ படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார்.

47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி-கமல் இணையும் (KHxRK) படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் களமிறங்கியுள்ளார்.

67 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்

‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானனர் கமல்ஹாசன். சினிமாவில் 67 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. அதில், “ஒரு குழந்தை... ஒரு தொடக்கம்... ஒரு அபாரம்... ஒரு சகாப்தம்” என குறிப்பிட்டிருந்தது.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திறைத்துறைக்கு வந்து 67 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் “என்னுடைய 67 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ​அந்த 67 ஆண்டுகளில், வெறும் 20 ஆண்டுகளை மட்டுமே நான் உண்மையான கற்றலாகக் கருத முடியும். மீதமுள்ள காலம், கழிவுநீர் ஓடும் போக்கிலேயே அடித்துச் செல்லப்பட்டதைப் போன்றதுதான்.

​இருப்பினும், ஒரு ஆறுதலான நம்பிக்கை என்னவென்றால்—அந்த நீர் வழிப்பாதை எவ்வளவு இருட்டாக இருந்தாலும், கட்டுப்படுத்தப்படாத பெருங்கடலான “கூட்டுச் சினிமா” என்ற பிரம்மாண்டமான வடிவத்தோடு சங்கமிப்பதற்கான காத்திருப்புதான் அது. கலைஞர்கள், ரசிகர்கள் என நாம் அனைவருமே அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

​எனவே, இந்தத் துறையில் எனது ஆண்டுகளைக் கணக்கிடுவதை மக்கள் நிறுத்திவிட்டு, வேறு சிறந்த எண்களைத் தேடத் தொடங்குவதற்குள், நான் பெற்ற அனுபவங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

​டிசம்பர் 1895-ல் லூமியர் சகோதரர்களின் முதல் திரையிடலுக்குப் பிறகு, திரைப்படத் துறை தோன்றி சுமார் 130 ஆண்டுகளும் 8 மாதங்களும் ஆகின்றன. திரையுலகின் முழு வரலாற்றிலும் பாதியளவுக்கும் மேலாக, அதாவது 67 ஆண்டுகள் நான் இதில் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை எனது குழுவினர் எனக்கு நினைவூட்டினார்கள்! அதை நினைத்துப் பார்ப்பதே மிகவும் வியப்பாக இருக்கிறது. இருப்பினும், என் கணக்குப்படி, வெறும் 20 ஆண்டுகளை மட்டுமே நான் உண்மையான கற்றலாகக் கோர முடியும். ​சினிமாவில் ‘ஜென் இசட் ’ தலைமுறையின் மிக மூத்த நபர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com