தமிழ் ரசிகர்களை கட்டிப்போட துடிக்கிறேன் - நடிகை கெட்டிகா சர்மா

'மீசைய முறுக்கு-2' படத்தின் மூலம் கெட்டிகா சர்மா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

'ராபின்ஹூட்' என்ற தெலுங்கு படத்தில் 'அதி தான் சர்ப்பிரைஸ்...' என்ற பாட்டுக்கு மாராப்பில் மல்லிகை பூ கட்டி கெட்டிகா சர்மா போட்ட ஆட்டம் அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்தது. ஒரே பாட்டில் பேசப்பட்ட கெட்டிகா சர்மா, எங்கு சென்றாலும் கவர்ச்சிகரமான உடை அணிந்து அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்து வருகிறார்.

இதனிடையே ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் 'மீசைய முறுக்கு-2' படத்தில் நடித்திருப்பதின் மூலம், தமிழ் சினிமாவிலும் கெட்டிகா சர்மா காலடி எடுத்து வைக்கவுள்ளார். சமீபத்தில் 'ஆரா பத்துக்கு பத்து' என்ற பாடலுக்கு அவர் போட்ட நடன அசைவுகள் சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆனது.

இந்த நிலையில் கெட்டிகா சர்மா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, "தெலுங்கு தாண்டி தமிழுக்கு வந்தது மகிழ்ச்சி. தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக கலக்க ஆசைப்படுகிறேன். இங்கும் ரசிகர்களை கட்டிப்போட துடிக்கிறேன். என்ன நடக்கிறது? என்று பார்ப்போம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com