ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...தனுஷ் படத்தை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்


I am very happy... Actress Keerthy Suresh praised Dhanushs film
x

தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் பாராட்டியுள்ளார்.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கத்தில் 3-வது திரைப்படமாக உருவாகி இருக்கும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில்,

'படம் சூப்பரா இருந்தது. கியூட்டா இருந்தது. இந்த மாதிரி கியூட் லவ் ஸ்டோரி பார்த்து ரொம்ப நாள் ஆனது. இதனை தனுஷ் சார் இயக்கி இருப்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. அவரை இங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்த்தேன், ஆனால் பார்க்க முடியவிலை. படத்தில் எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். தனுஷ் சாருக்கும், படத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்' என்றார்.

1 More update

Next Story