''ஹவுஸ்புல் 5-ல் கதாநாயகியாக நடிப்பேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை'' - சவுந்தர்யா சர்மா

கடந்த 2017-ல் வெளியான 'ராஞ்சி டைரீஸ்' மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சவுந்தர்யா சர்மா .
I could’ve never imagined I’d be a lead in Housefull 5, says Soundarya Sharma on release
Published on

மும்பை,

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளவர் சவுந்தர்யா சர்மா . டெல்லியில் பிறந்து வளர்ந்த சவுந்தர்யா, கடந்த 2017-ல் வெளியான 'ராஞ்சி டைரீஸ்' மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது இவர் அக்சய் குமார் நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த பட வாய்ப்பு குறித்து தனது உணர்ச்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்த பதிவில், ' சினிமாவை நேசிக்கத் தொடங்கியபோது, நான் ரசித்த படங்களில் ஒன்று 'ஹவுஸ்புல்'. அந்த நேரத்தில், ஒரு நாள், இந்த படத்தில் ஒரு பகுதியாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com