'பாட்டல் ராதா' படத்தை பார்த்து அழுதுவிட்டேன் - நடிகர் மணிகண்டன்


பாட்டல் ராதா படத்தை பார்த்து அழுதுவிட்டேன் - நடிகர் மணிகண்டன்
x

தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா' படத்தை பார்த்து அழுதுவிட்டதாக நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் பாட்டல் ராதா. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே தேதியில் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் குடும்பஸ்த்தின் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது நடிகர் மணிகண்டன் 'பாட்டல் ராதா' படத்தை பார்த்து அழுதுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதாவது "நான் ஒரு படத்தை பார்த்து அழுவது மிகவும் அரிது, ஆனால் பாட்டல் ராதா திரைப்படத்தை பார்த்து அழுதுவிட்டேன். அழக்கூடாது என நினைத்தேன், ஆனால் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. இந்த திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது. குரு சோமசுந்தரம் மிகச்சிறந்த நடிகர், இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்" என கூறியுள்ளார்.


Next Story