"பைக் டாக்சி" படக்கதையைக் கேட்டு அழுதுவிட்டேன் - நடிகர் வையாபுரி

கண்டிப்பாக "பைக் டாக்சி" வெற்றிப்படமாக அமையும் என்று வையாபுரி கூறினார்.
"பைக் டாக்சி" படக்கதையைக் கேட்டு அழுதுவிட்டேன் - நடிகர் வையாபுரி
Published on

சென்னை,

நியூ நார்மல் பிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்சா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது. மேலும், திரைப்படத்தின் பூஜை, திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்நிலையில், இந்த விழாவில் நடிகர் வையாபுரி பேசியதாவது,

எங்களை வாழவைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நான் இப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்பா என்றாலே தானாகப் பொறுப்பு வரும். ஆனால் அப்பாவை விட நாயகி நக்சாவிற்கு இப்படத்தில் அதிக பொறுப்பு உள்ளது. இயக்குநர் கதை சொன்னபோது அழுதுவிட்டேன். அவ்வளவு உருக்கமாக இருந்தது கதை. லைசென்ஸ் படத்தில் ஒரு நாள் மட்டுமே நடித்தேன். இயக்குநர் பேசக்கூட மாட்டார் இவர் ஒழுங்காகக் கதை சொல்வாரா ? என்று நினைத்தேன், மிரட்டிவிட்டார். நாயகிக்கு மிக அழுத்தமான பாத்திரம், புதுமுக நாயகி ஓகேவா எனக்கேட்டேன், உங்களுக்கு மகளாக இவர்தான் சரியாக வருவார் என்று இயக்குநர் கூறினார்.

மேலும், அவரை வைத்து எடுத்த இரண்டு காட்சிளை காட்டினார், அதைப் பார்த்தேன் அற்புதமாக நடித்துள்ளார் வாழ்த்துகள். ரெஹனா மேடம் இசையில் நடிப்பது மகிழ்ச்சி. லைசென்ஸ் படம் வெற்றிப்படமாக இல்லையென்றாலும், அடுத்த பட வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப்படமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com