‘அந்த படத்தில் நான் நடிக்கவில்லை’.. நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘அந்த படத்தில் நான் நடிக்கவில்லை’.. நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவை தாண்டி பான் இந்தியா அளவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி, வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

தற்போது அவர் ‘டிரெய்ன்’, ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின. அதாவது ராவணன் (யாஷ்) தம்பி விபீஷனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவல்களை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். “நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதுபோன்ற தகவல் எப்படி பரவியது என தெரியவில்லை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com